கொழும்பில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை, களனி. கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹாய பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு அருகில் நேற்று (31) வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,ய் எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த பொலிஸ் ஊடரங்கு இன்று (01) காலை 5.00மணி வரை அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





கொழும்பில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் கொழும்பில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் Reviewed by Editor on April 01, 2022 Rating: 5