"தேசத்தின் நாயகன்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட டாக்டர் கே.எல்.நக்பர்

(றிஸ்வான் சாலிஹு)

இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையம் ஒழுங்கு செய்திருந்த "17ஆவது சர்வதேச கல்வி, சுற்றுலா தொடர்பான ஆராய்ச்சி மாநாடு -2022 கடந்த 2022.03.31ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கொவிட்-19 காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு தன்னால் முடியுமான வரை சுகாதார சேவை ஊடாக பங்களிப்பு செய்து, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதனோடு இணைந்த ஆலோசனைகளையும் மக்களுக்கு வழங்கி கொவிட் பரவலை கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு செய்தமைக்காக அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் அவர்கள் " Certificate of Corona Warriors 2022 - Hero of the Nation" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டாக்டர் நக்பர், தனது வைத்திய துறைக்கும் அப்பால் திறமையுள்ள வசதி குறைந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதியுதவி செய்வதோடு, பல தரப்பட்ட சமூக சேவைகளையும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி செய்யக்கூடியவராவார். இவருக்கு இந்த உயரிய விருது கிடைத்திருப்பது அவரின் சமூக சேவைக்கான ஓர் அடையாளம் என்பதில் ஐயமில்லை.

இவர், முன்னாள் சுகாதார அமைச்சின் ஆலோசகராகவும், அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தினால் சுதேச மருத்துவ பயன்பாடு சம்பந்தமான சட்ட விதி முறைகள் வெளியிடப்பட்டது. அதனுடைய இலங்கையின் நிபுணத்துவ ஆலோசகராவும், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தவிசாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.







"தேசத்தின் நாயகன்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட டாக்டர் கே.எல்.நக்பர் "தேசத்தின் நாயகன்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட டாக்டர் கே.எல்.நக்பர் Reviewed by Editor on April 10, 2022 Rating: 5