தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் நீரானது SLS 614 தரநிர்ணயத்தின்படி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆய்வுகூடங்களிலும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விநியோக முறைமையில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, 100% சுகாதார பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குழாய்நீரின் தரம் பற்றி வெளியாகும் பொய்ப் பிரசாரங்கள் குறித்து எமது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாமென சபையின் பொது முகாமையாளர் நீர்ப்பாவனையாளர்களை கேட்டுள்ளார்.
