எரிபொருள் பாவனையாளர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவித்தல்

நாட்டில் எரிபொருளை பாவிக்கு பொதுமக்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், எதிர் வரும் பண்டிகை காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைக்கிறது என்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தேவையற்ற விதத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி நிற்பதை தவிர்த்து கொள்ளுமாறும், கொள்கலனில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்வரும் நாட்களில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



எரிபொருள் பாவனையாளர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவித்தல் எரிபொருள் பாவனையாளர்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவித்தல் Reviewed by Editor on April 11, 2022 Rating: 5