இலங்கையில் மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"அதிக விழிப்புணர்வோடும் துணிச்சலோடும் ஒரு தலைமுறையினரால் நாட்டில் இடம்பெறுகின்ற இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேளையில், இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.
இனவாத அல்லது மதப் பிளவுகள் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ மீண்டும் பிரவேசிக்க இடமளிக்காது என நான் நம்புகிறேன். அத்துடன் ஊழல், உறவுமுறை அல்லது குடும்ப ஆட்சியை மீண்டும் இலங்கையில் அனுமதிக்கக் கூடாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சிக்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது -குமார் சங்கக்கார
Reviewed by Editor
on
April 12, 2022
Rating:
