(றிஸ்வான் சாலிஹு)
தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தலுக்கமைய சமுர்த்தி வங்கிகள் அனைத்தும் திங்கள் (11) மற்றும் செவ்வாக்கிழமை (12) ஆகிய தினங்களில் திறந்து பொது மக்களின் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் இந்நடவடிக்கைகள் முன்னடுக்கப்பட்டுள்ளது என்று வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தெரிவித்துள்ளார்.
உதவி முகாமையாளர் எம்.ஐ.மிஹாஸ் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இக்கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் கொடுக்கல் வாங்கலுக்கு சமுர்த்தி வங்கிகள் திறப்பு
Reviewed by Editor
on
April 11, 2022
Rating:
