ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பொதுமக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்தவுள்ளது.
அதனடிப்படையில் புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் வியாழன் (28) நள்ளிரவு வரை 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள வேலைநிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு
Reviewed by Editor
on
April 25, 2022
Rating:
