தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் - சரித ஹேரத் எம்.பி

அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியதை தான் ஆமோதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது முன்னோக்கி செல்லும் வழியை நிர்வகிப்பதற்கான 6 படிகளை நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார், அதில் முதல் படியாக தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (22) முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சரவை மற்றும் பிரதமரை பதவி விலகுமாறும், சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் - சரித ஹேரத் எம்.பி தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் - சரித ஹேரத் எம்.பி Reviewed by Editor on April 24, 2022 Rating: 5