பொத்துவில் கோட்டக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

பொத்துவில் ஆசிரியர்கள் குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொத்துவில் கோட்டக் கல்விப் பணிமனையில் இன்று (23) சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வித்துறை சார்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மார்க்க சொற்பொழிவும் இப்தாரைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட மஃரிப் தொழுகையும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்திலே இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




பொத்துவில் கோட்டக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு பொத்துவில் கோட்டக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு Reviewed by Editor on April 23, 2022 Rating: 5