சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். விபிஎன் கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது.
அதிகாரிகள் மேலும் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும்,சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் என்று அமைச்சர் நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும்- நாமல் ராஜபக்ஷ
Reviewed by Editor
on
April 03, 2022
Rating:
