சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையுடன் இயங்கும் பிரதேச நல்லிணக்க மன்றங்கள் ஒன்றிணைந்த நல்லிணக்க இப்தார் ஏற்பாடு இன்று (27) கல்முனையில் ஆஷாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் விசேட அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜீ.ஜெகதீசன்,கல்முனை பொலீஸ் பிராந்திய பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், 10 பிரதேச நல்லிணக்க மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வின் முன்னேற்பாடாக காலை முதல் மூவின மக்களும் கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற பிரதான நான்கு மாதங்களுக்கு விஜயம் மேற் கொளண்டார்கள். அந்த அடிப்படையில் முதலாவதாக கல்முனையில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், அதன் பின்னர் பாண்டிருப்பில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்திலும் மூன்றாவதாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நான்காவதாக கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீ பரசுராமர் மகாவிகாரை குழு விஜயம் மேற்கொண்ட சிறப்பம்சமாகும்.
