(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு வழங்கும் பொருட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பேரீத்தம் பழங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
முஸ்லிம் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.முக்தார் ஹுசைன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஜனாப் எம்.பீ.எம். ஹமீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஏ.எம். தமீம் கலந்து கொண்டு பேரீத்தம் பழங்களை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு வழங்கி வைத்தார்.
கலாச்சார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழம் அக்கரைப்பற்றுக்கு அன்பளிப்பு
Reviewed by Editor
on
April 28, 2022
Rating:
Reviewed by Editor
on
April 28, 2022
Rating:
