பிரதமர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

"பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் என்றும் அமைச்சரவையில் உள்ள ஏனைய அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்" என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது ஜனாதிபதி கோட்டாபய புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு வழி வகுத்துள்ளது என்பதோடு, கூட்டுப் பங்காளிகளின் கோரிக்கைகளுக்கு மத்தியில் இது இடம்பெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




பிரதமர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா பிரதமர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா Reviewed by Editor on April 04, 2022 Rating: 5