இராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது சட்டபூர்வமானதில்லை- சாலிய பீரிஸ்
அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்கவேண்டும் இல்லாவிட்டால் அந்த இராஜினாமா சட்டபூர்வமானதில்லை என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும்.
அமைச்சர்கள் பிரதமரிடம் தங்கள் இராஜினாமாவை கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன அப்படியானால் இந்த இராஜினாமாக்கள் சட்டபூர்வ தன்மையை கொண்டவையில்லை.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.
எங்கள் நாட்டினாலும் பொருளாதாரத்தினாலும் இந்த நிச்சயமற்ற நிலையை தாங்கமுடியாது என நான் கருதுகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
April 04, 2022
Rating:
