பாகிஸ்தானின் சியால்கோட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கைக் குடிமகன் பிரியந்தகுமாரை கும்பல் அடித்துக் கொன்ற வழக்கில் தீர்ப்பை அறிவித்து பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
மேலும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது என்று பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் கவுல் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 3ஆம் திகதி அன்று சியால்கோட்டில் அவர் முகாமையாளராக இருந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொண்ட கும்பலால் குமார தாக்கப்பட்டார்.
அதன் பின்னர் அந்த கும்பல் அவரை சித்திரவதை செய்து பின்னர் அவரது உடலை எரித்தமை குறிப்பிடத்தக்கது.
