பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே அந்த நாட்டுக்கான கடன் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அண்மையில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இதன் பின்னணியில் வெளிநாட்டு சதி காணப்படுவதாக தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார்.
இதனிடையே தாம் பதவி விலகுவதாகவும் நாடாளுமன்றத்தை கலைக்குமாறும் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ள நிலையில் 90 நாட்களில் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் காணப்படும் அரசியல் நெருக்கடியினைக் கருத்திற் கொண்டு அந்த நாட்டுக்கான அடுத்த கட்ட கடனுதவி புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
April 05, 2022
Rating:
