உலக ஒழுங்கியலை குலைக்கும் சதி நிறைவேறியதாக ரஷ்யா கவலை

(தெளபீக் கனி)

உலக அரசியல் சமநிலையை நீக்கும் அமெரிக்காவின் அரசியல் நோக்கு வெற்றியடைந்திருப்பதாக,ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ,நா, மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டதையடுத்தே, ஐ.நாவுக்கான ரஷ்யத்தூதுவர் இதை தெரிவித்தார்.  அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 நாடுகள் வாக்களித்தன. எதிராக 24, நடுநிலை யாக 58 வாக்குகள் கிடைத்தன.

ஜ.நா பொதுச்சபையில்,(07) இந்த வாக்களிப்பு இடம்பெற்றது. இத்தீர்மானம், அமெரிக்காவின் அரசி யலை ஏகபோக எஜமனாக்கியுள்ளது. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடு கள் உலக ஒழுங்கியலைக் குலைத்து விட்டதாகவும் ரஷ்யா கூறுகிறது. உக்ரைன் படையெடுப்பில், ரஷ்யப் படைகள் மேற்கொண்ட அழிவுகள் மற்றும் மனித அவலங்களை ஆதாரம் காட்டியே,ஐ,நா,பொதுச்சபையில்  இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

குற்றுயிராகக் கிடந்து உயிர் பிழைக்க அலறுவோர் மற்றும் உயிர்துறந்து வீதிகளில் பிணமாகக் கிடக்கும் சடலங்களை வீடியோக்கள் மற்றும் படங்களூடாக  ஆவணப்படுத்தியே, அமெரிக்கா இந்த பிரேரணையை ஐ.நா.பொதுச்சபையில் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



உலக ஒழுங்கியலை குலைக்கும் சதி நிறைவேறியதாக ரஷ்யா கவலை உலக ஒழுங்கியலை குலைக்கும் சதி  நிறைவேறியதாக ரஷ்யா கவலை Reviewed by Editor on April 09, 2022 Rating: 5