வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படுமா? மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு இறக்குமதிக்கும் வெளிநாட்டு நாணயத்தை வெளியிடும் போது, ​​முன்னுரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்து வருவதால் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது சுமார் இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தினக்குரல்)



வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படுமா? மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம் வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படுமா? மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம் Reviewed by Editor on April 09, 2022 Rating: 5