(ஐ.ஏ.சிறாஜ்)
அட்டாளைச்சேனை, கோணாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எல்.றியாஸ் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.முஹம்மட் ஹம்சா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவராகவும், அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
பாடசாலை அபிவிருத்திக் குழு, கிராம அபிவிருத்திச் சங்கம், சிவில் பாதுகாப்புக் குழு, விளையாட்டுக் கழகங்கள் என பல்வேறு பொது அமைப்புக்களில் பதவிகளையும் வகித்து, அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் றியாஸ், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ.எல்.ஆதம்லெப்பை, எம்.கதீஜாஉம்மா ஆகியோரின் புதல்வராவார்.
