எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில்

நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெறுவதாக தனியார் பௌசர் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம், நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக பௌசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட நீண்ட வரிசை
தற்சமயம் குறைவடைந்திருப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையில் எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில் எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை சுமூகமான முறையில் Reviewed by Editor on April 25, 2022 Rating: 5