பொத்துவில் ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு (21) அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி.ஏ.வாஜித், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபில், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டர்.
இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட, கூட்ட மண்டபத்துக்கான கதிரைகள், ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் வைத்தியசாலைக்கான வாகனம் என்பன பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வைத்திய அத்தியட்சகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.