கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கி வைப்பு

கலைஞர் ஓய்வூதியக் கொடுப்பனவானது, சமூக, சமூக நலனோம்பல் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சுடனும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடனும் சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித் திட்டமாகும். 

நலிவுற்ற நிலையிலிருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல்,பொருளாதார ஆற்றலை வளர்த்தல், தேசத்தின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்புமாகும். 

இக்கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்முறையில் நிறைவேற்ற கலைஞர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர மாதாந்த ஓய்வூதியம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

இந்தவகையில் இறக்காமம் பிரதேசத்திலிருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ரஷ்ஷான் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் (மத்திய) திருமதி ஏ.எல். நௌபீஸா மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் (மாகாணம்) திருமதி வசந்தா ரன்ஞனி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.



கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கி வைப்பு கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கி வைப்பு Reviewed by Editor on April 08, 2022 Rating: 5