பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்

பொதுப்போக்குவரத்து சேவை மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் யாவும் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதை கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுரை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில், பொதுப்போக்குவரத்து, அம்புலான்ஸ், பாடசாலை வாகனங்கள், அத்தியாவசிய சேவை போக்குவரத்து, சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து ஆகியவை  தடையின்றி பயணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது பல இடங்களில் அரசுக்கெதிராக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.



பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல் பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல் Reviewed by Editor on April 24, 2022 Rating: 5