இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் முஜிபுர் றஹ்மான் ஆகியோர் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கொழும்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகள் பற்றிய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காலிமுக திடலை சுற்றி இருக்கும் வீதிகளை அடைத்து இரும்பு முள் வேலிகளை போட்டு பொலிஸார், அதிரடிபடை மற்றும் கடற்படை சிப்பாய்களை அரசு நிறுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் பொலிசாராக செயல்படுங்கள். அரசாங்கத்தின் பொலிசாராக செயற்பட வேண்டாம்" என தெளிவாக பொலீசாரிடம் சொன்னோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, "அரச பயங்கரவாத" நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளதோடு, நாம் அனைத்து காவலரண்களுக்கும் சென்று பேசியதை அடுத்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டமை கண்கூடாக தெரிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
April 24, 2022
Rating:






