மக்களின் போராட்டங்கள் நியாயமானவை, இந்நிலை தொடர்ந்தால் ஆயுத போராட்டமாக மாறும் - எஸ்.பி

இந்த நாட்டில் தற்போது நடக்கும் போராட்டம் நியாயமானது, இந்த நிலை தொடர்ந்தால் இது ஆயுத போராட்டமாக மாறலாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

இன்று (07) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ,

இன்று நாட்டில் பொருளாதார பாதிப்பு காணப்படுகிறது தான் ஆனால் பாரிய துர் நிலையில் இல்லை.

மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்குகின்றனர். அதனால் கோபமுற்றமையால் இன்று இவ்வாறான போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாங்கள் இந்த மாதம் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பிரச்சனை தீர்வை கொண்டுவருவோம்.

அதே போல மின்சார துண்டிப்பும் நிவர்த்தியாகும் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்யவேண்டிய தேவை ஏற்படாது.

இந்தமாத கடைசியில் அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு தொடர்ந்து போராட்டம் நடாத்தினால் அன்று 1985,1986ல் வடப்பகுதியில் ஆயுத ஏந்தியவர்கள் ஆதிக்கம் காணப்பட்டது.

அந்நேரத்தில் அமிர்தலிங்கம் அரசாங்கத்தை ஏசினரே தவிர அங்கு ஆயுதம் ஏந்தியவர்களை குறித்து எதுவும் கூறவில்லை ஏன்? அவ்வாறு அவர்கள் குறித்து கூறி இருப்பின் அவர்களிற்கு அங்கு செல்ல முடியாது.

ஆனால் பிரபாகரனின் பலம் அதிகரிக்கப்பட்டதுடன் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார்.

இதே நிலைதொடர்ந்து நீடித்தால் அன்று ஆயுதம் ஏந்திய போராட்டத்தை போன்ற நிலை உருவாகும்.

எனவே அந்த நிலை நமக்கு வேண்டாம். தற்போது அனைவரும் ஒன்றினைந்து போராட்டங்களை நடத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து நாட்டின் வளர்ச்சிக்கு செயற்படுவோம் என்றார்




மக்களின் போராட்டங்கள் நியாயமானவை, இந்நிலை தொடர்ந்தால் ஆயுத போராட்டமாக மாறும் - எஸ்.பி மக்களின் போராட்டங்கள் நியாயமானவை, இந்நிலை தொடர்ந்தால் ஆயுத போராட்டமாக மாறும் - எஸ்.பி Reviewed by Editor on April 07, 2022 Rating: 5