ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (12) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 81 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர் Reviewed by Editor on April 12, 2022 Rating: 5