கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் இன்று (12) செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளனர்.
வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
நேற்று (11) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இவர்கள், வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இன்று பிற்பகல் றம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றுள்ளனர்.
றம்பொடை நீர்வீழ்ச்சியில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏழு இளைஞர்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர் காக்கும் படையினர் நான்கு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் மூன்று இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
