(றிஸ்வான் சாலிஹு)
பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் அக்கரைப்பற்று கோட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து இவ்வருடம் க.பொ.த சா/தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்பார்க்கை வினாக்களுடன் கூடிய இலவசக் கல்விக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளதாக கல்வி நிறுவனத்தின் தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், எதிர்வரும் 11.04.2022 தொடக்கம் 18.04.2022ஆம் திகதி வரையான நாட்களில் காலை 8.30 மணி முதல், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம், ஆயிஷா பாலிகா மகளிர் கல்லூரி, அல்- பாத்திமிய்யா வித்தியாலயம், அல்- முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மற்றும் அல்- பாயிஷா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடாத்தவுள்ள இக்கருத்தரங்கில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்கின்றார்கள்.
பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனமானது கடந்த காலங்களிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வேண்டிய சகல விதமான இலவச ஆலோசனைகள் மற்றும் கருத்தரங்குகளையும் செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
April 09, 2022
 
        Rating: 
 