பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வேளை மோட்டார் சைக்கிளில் வந்த படையினருக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை குறித்து பொலிஸ்மா அதிபர் உடனடி விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த படையினரை தடுத்து நிறுத்திய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கவிதிமுறைகளிற்கு மாறானதவறான நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு இராணுவ தளபகி பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோன்று பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவித்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
(நன்றி -தினக்குரல்)
Reviewed by Editor
on
April 06, 2022
Rating:
