அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (29) வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைப்பெற்றிருந்தது.
Reviewed by Admin Ceylon East
on
April 29, 2022
Rating:
