ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் நடாத்தி பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்புடைய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற போது கேகாலை மாவட்டத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸ் குழுவைச் சேர்ந்த மேலும் 3 கான்ஸ்டபிள்களும் கண்டி – குண்டசாலை பகுதியில் கைது செய்யப்படதாக தெரிவிக்கப்படுகிறது.
ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
எவ்வாறாயினும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
