(றிஸ்வான் சாலிஹு)
Iconic Youths அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் அமைப்பின் தலைவரும், சமூக ஆர்வலருமான யூ.எல்.தில்ஷான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அததியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம். அன்ஸார் (நளீமி) அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி, சிறுவர் அபிவிருத்தி இல்லத்தின் பொறுப்பதிகாரி ஜனாப்.அலாவுதீன், அமைப்பின் நிருவாக குழு உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், தனவந்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரதான உரை நிகழ்த்திய பிரதேச செயலாளர் தனதுரையில்,
"சிறுவர்களுக்கு அன்பு காட்டுதலும் பெரியவர்களுக்கு மரியாதை செய்வதையும் இஸ்லாமிய பார்வையில் பெரும் நன்மைகளை தருகின்றதோடு, இவ்வாறான செயற்திட்டங்கள் ஊடாக ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இவ்வாறான இப்தார் நிகழ்வு இந்நிலையத்தில் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
