நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில வாரங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்டவரிசைகளின் மக்கள் எரிபொருளுக்காகக் காத்திருந்தனர்.
இருந்தபோதிலும் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சீராக பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இடம்பெற்று வருவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இருப்பினும் மண்னெண்ணையினைப் பெற்றுக் கொள்வதற்காக வருகைதரும் மக்கள் அதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாகவே உள்ளதுடன், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை சேமித்து வைக்கும் நோக்கில் கலன்களில் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்த்து நாட்டின் நெருக்கடியான சூழலை நிவர்த்திப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுள்ளது.
Reviewed by Editor
on
April 27, 2022
Rating:
