(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு பதினொரு பேர் எட்டு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ”பவர் சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக அட்டாளைச்சேனை, தைக்காநகர் எவர்டொப் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.
32 விளையாட்டு கழகங்களின் பங்குபற்றலுடன் விலகல் முறையில் நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில், அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகத்தை எதிர்த்து தைக்காநகர் எவர்டொப் கழகம் எதிர்த்தாடி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றதுடன் சம்பியன் கிண்ணம் மற்றும் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காராக எவர்டொப் அணியின் வீரர் என்.எம்.சியாமும், சுற்றுத்தொடரின் சிறந்த வீரராக இதே அணியின் முஹம்மட் இனாத்தும் தெரிவு செய்யப்பட்டார்.
இச்சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகமானது இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
May 20, 2022
Rating:

