தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் டெங்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம்

(றிஸ்வான் சாலிஹு)

சுகாதார அமைச்சினால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு விசேட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு செயற்திட்டம் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் புதன்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், முப்படையினர், டெங்கு கள தடுப்பு பிரிவினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து இச்செயற்திட்டத்தில் ஈடுபட்டனர்.

டெங்கு பரவக்கூடிய உட்புற மற்றும் வெளிப்புற இடங்களை அடையாளம் கண்டு அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றி வைத்திய அதிகாரியினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.

2022.05.18ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 2022.05.24ஆம் திகதி வரை இத்தேசிய டெங்கு கட்டுப்பாடு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் காதர் மேலும் தெரிவித்தார்.






தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் டெங்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் டெங்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் Reviewed by Editor on May 20, 2022 Rating: 5