அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயது சிறுமி ஆயிஷா (சட்டரீதியான காரணம் கருதி பெயர் மாற்றி எழுதப்பட்டுள்ளது) 2022.05.23 இரவு ஆயிஷா தனது குடும்பத்துடன் அட்டாளைச்சேனை கடற்கரைக்கு செல்கிறாள். ஆயிஷாவின் மூத்த சகோதரி இடைநடுவே வீடு செல்ல நேரிட்டதால் ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த ஆயிஷா அழைக்கப்பட்டு தனது சகோதரிக்கு பாதுகாப்பாக அவளுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள்.
தனது சகோதரியை வீட்டில் விட்டுவிட்டு இன்னும் பருவம் எய்தாத அந்த 11 வயது சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு செல்கிறாள்.
அப்போது இரவு 10.30 மணி இருக்கும். கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த ஆயிஷா வழியில் இரண்டு காவலிகளால் இடைமறிக்கப்பட்டு வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப் படுகிறாள்.
அங்கு ஒரு காவலி வெளியில் காவல் இருக்க மற்றய காவலி அந்து பிஞ்சு உடம்பை துவம்சம் செய்திருக்கிறான். இடையே அந்த காவலியின் தாய் உள்வரும் சப்தம் கேட்டு அந்த குழந்தையை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என்று கூறி மதிளுக்கு மேலால் அவளை வெளியே தூக்கிப் போட்டு விட்டார்கள்.
இது தற்சமயம் எனது கண்காணிப்பின் கீழ் விசாரணை மற்றும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள ஒரு குழந்தை.
சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இரு காவலிகளும் ஆயிஷாவின் உறவுக்கார காவலிகள். பொலிஸின் தேடுதலில் இன்னும் அந்த காவலிகள் அகப்படவில்லை.
அட்டுளுகமை ஆயிஷா தொடர்பான பதிவுகள் முகப்புத்தகம் முழுக்க பரவி உள்ளதால் இதையும் எமது சமூகம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு.
அடுளுகம ஆயிஷா மரணித்தது போல் அட்டாளைச்சேனை ஆயிஷாவும் மரணித்தால்தானா இந்த சம்பவம் சமூகத்தில் எடுபடும்???
இந்த காவலிகளுக்கு எமது சமூகத்தின் தீர்ப்பு என்ன??
இது போன்ற ஏனைய காவலிகளுக்கும் தீர்ப்பு என்ன??
இன்னும் பல ஆயிஷாக்களின் பாதுகாப்புக்கு எமது சமூகத்தின் தீர்வு என்ன??
எனக்கும் 06 வயதில் ஒரு ஆயிஷா இருக்கிறாள் என்ற மன உருக்கத்துடன்..
சட்ட வைத்திய அதிகாரி.
 
        Reviewed by Editor
        on 
        
May 29, 2022
 
        Rating: 
 