(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இம்மாதம் 30 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் வாராத்தை டெங்கு அற்ற வாரமாக பிரகடனப்படுத்துவதுடன், இராணுவத்தினர், பொலிஸார், சுகாதார கள உத்தியோகத்தர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யவுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக வீடுகளின் உள்ள பகுதியிலே டெங்கு உருவாகுவதனால், தங்களின் வீடுகளில் உள்ள கிணறுகள், சின்கிலிருந்து வடிந்தோடும் நீருக்கு வைக்கும் பாத்திரங்கள், தண்ணீர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக நீரை சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், குளிர்சாதனப்பெட்டியின் பின் புறத்தில் தேங்கி இருக்கும் நீர் என்பனவற்றில் அதிகமான நுளம்பின் குடம்பிகள் இருப்பதாக விசேடமாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார்.
எனவே, வீடுகள், சுற்றுப்புறச்சூழல்கள் அல்லது வளவுகளில் நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அல்லது நீர்க்குடம்பிகள் காணப்படுமாயின் உரியவர்களுக்கெதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் காதர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 02, 2022
Rating:
