ஹரின் மற்றும் சரத் பொன்சேகா கடும் வாக்குவாதத்தில்

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற சமகி ஜன பலவேகய கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"இது பேச்சு திட்டமிடல் தொடர்பான ஒரு வாக்குவாதம், இது ஒரு தவறான புரிதல் என்பதால் இருவரும் பிரச்சினையை தீர்த்துக்கொண்டனர்," என்று கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பாக தனது தனிப்பட்ட முகநூலில் குறிப்பிடுகையில்,

"நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், கடின உழைப்புக்குப் பிறகு வேறு யாரும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள், மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும், ”என்று அவர் குறிப்பிட்டார்.



ஹரின் மற்றும் சரத் பொன்சேகா கடும் வாக்குவாதத்தில் ஹரின் மற்றும் சரத் பொன்சேகா கடும் வாக்குவாதத்தில் Reviewed by Editor on May 02, 2022 Rating: 5