பாடசாலைகளுக்கிடையில் மெய்வல்லுநர் போட்டி நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் வலய மட்ட மெய்வல்லுநர் மற்றும் பெரு விளையாட்டுக் போட்டிகளை றமழான் கால விடுமுறையை தொடர்ந்து நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல்  தலைமையில் அக்கரைப்பற்று  வலயக் கல்விப்பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில்,  உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை வலய மட்ட விளையாட்டுப்போட்டிகள் நாடு முழுவதும் கொவிட்-19 காரணமாக கடந்த காலங்களில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






பாடசாலைகளுக்கிடையில் மெய்வல்லுநர் போட்டி நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் பாடசாலைகளுக்கிடையில் மெய்வல்லுநர் போட்டி நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் Reviewed by Editor on May 01, 2022 Rating: 5