மும்பையிலுள்ள ஹோட்டலொன்றில், 40 வயதான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த முதியவரொருவர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 40 வயதான பெண்ணிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டலுக்கு 40 வயதான பெண்ணொருவருடன் 61 வயதான முதியவர் காலை 6 மணிக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் நான்கு மணிநேரத்துக்குப் பின்னர் வரவேற்பு அறைக்கு அழைப்பை எடுத்த பெண், தன்னுடன் வந்த முதியவர், திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்துள்ளார்.
ஊழியர்கள் சென்று பார்த்தபோது, மூச்சுப் பேச்சு இன்றி முதியவர் கிடந்துள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த ஹோட்டல் நிர்வாகம் முதிவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். பரிசோதித்த வைத்தியர்கள் மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
முதியவருடன் தங்கியிருந்த பெண்ணை அழைத்து விசாரித்த போது,
முதியவர் தன்னுடன் உல்லாசம் அனுபவித்த போது, மது குடிக்க முயன்றார். எனினும், திடீரென மயங்கி விழுந்துவிட்டார். என தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(தமிழ் மிரர்)
