(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பாக்கியராஜ அண்மையில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் சென்றதை அடுத்து திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த டீ.மோகனகுமார் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி,திருக்கோவில், கல்முனை,அம்பாறை போன்ற பிரதேச செயலகங்களில் உதவி,பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக இவர் கடமையாற்றியிருந்தவராவார்.
எதிர்வரும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பதுடன் இவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்ட நிர்வாக அனுபவம் உள்ள ஒரு அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
