நாட்டில் அமைதியின்மையின் போது அம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் அனைத்து நபர்களையும் கேட்டுக் கொள்கிறது.
அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்ற மோதலின் போதும் சில அம்பியூலன்ஸ் வாகனங்கள் சேதமடைந்துள்ளன என அச்சங்கத்தின் தலைவர் டி. விஜேசிங்க தெரிவித்தார்.
அம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பங்கு நோயாளிகளை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகும். அனைத்து நோயாளிகளின் உயிரையும் காப்பாற்ற அம்புலன்ஸ் சாரதிகள் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அம்புலன்ஸ்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்தால், பொலிஸ் பாதுகாப்பின்றி நோயாளர்களை ஏற்றிச் செல்ல முடியாது என சங்கத்தின் தலைவர் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:
