(றிஸ்வான் சாலிஹு, பட உதவி - றுக்ஸான்)
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (06) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலகியும், எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (06) அக்கரைப்பற்று நீதிமன்ற முன்றலி்ல் இடம்பெற்றுள்ளதோடு, இதில் அதிகமான சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
May 06, 2022
Rating:
Reviewed by Editor
on
May 06, 2022
Rating:










