தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரண்டு சிறுமிகள் வீதியால் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ காரில் வந்தவர்கள் சிறுமியொருவரின் கையைப்பிடித்து இழுத்து காரில் ஏற்றுவதற்கு முற்பட்டபோது மற்றைய சிறுமி தனது நண்பியை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். காப்பாற்றப்பட்ட சிறுமியின் கையில் நகக் கீரல் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
தோப்பூரில் சிறுமி கடத்தல் முயற்சி, இன்னுமொரு சிங்கச் சிறுமியால் முறியடிப்பு
Reviewed by Editor
on
May 30, 2022
Rating:
