க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் இன்று (13) ஆரம்பமாகவுள்ள தாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இப்பரீட்சைக்கான நுழைவுச்சீட்டு விநியோகம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.