(றிஸ்வான் சாலிஹு)
2022ஆம் வருட ரமழான் மாதம் முழுவதும் அக்கரைப்பற்று மஸ்ஜித் பத்தாஹ்வில் தலைசிறந்த உலமாக்களினால் நடாத்தப்பட்ட "ரமழான் கால இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி" யில் பங்குபற்றி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு வியாழக்கிழமை (12) பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி (ஜே.பி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.முக்தார் ஹுசைன் அவர்களும், விசேட அதிதிகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை கெளரவ, விசேட அதிதிகள் உட்பட பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து வழங்கியதுடன், நன்றியுரையை பள்ளிவாசல் செயலாளர் எம்.சீ.ஜலால்தீன் நிகழ்த்தினார்.
Reviewed by Editor
on
May 13, 2022
Rating:



















