அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனாவின் வீட்டுக்கு முன்னால் ரயர் தீயிட்டு எரிப்பு சம்பவம் திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்களை தீக்கிரையாக்கப்பட்டுவரும் நிலையில் அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னால் டயர் போட்டு எரித்துள்ளார்கள்.
இதனையடுத்து பொலிசார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
(நன்றி - தினக்குரல்)
Reviewed by Editor
on
May 10, 2022
Rating:

