மகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலைமைக்கு முன்னாள் பிரதமர் உட்பட அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஓமல்பே சோபித தேரர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
