கோட்டா கோ கம போராட்ட இடத்தை பராமரிப்பதற்கான குழுவொன்றை பிரதமர் நியமிப்பு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை (15) ஞாயிற்றுக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்ட இடத்தை  பராமரிப்பதற்கான குழுவொன்றையும் பிரதமர் நியமித்துள்ளார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, இராணுவ மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டா கோ கம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக அவர் கூறினார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்ட இடங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.





கோட்டா கோ கம போராட்ட இடத்தை பராமரிப்பதற்கான குழுவொன்றை பிரதமர் நியமிப்பு கோட்டா கோ கம போராட்ட இடத்தை  பராமரிப்பதற்கான குழுவொன்றை பிரதமர் நியமிப்பு Reviewed by Editor on May 14, 2022 Rating: 5