காத்தான்குடி நகரசபை ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு மாபெரும் சிறுவர் களியாட்ட நிகழ்வுகள் ஹிஸ்புல்லாஹ் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.
நாளை (03) செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள மேற்படி களியாட்ட நிகழ்வுகளில் சிறுவர் விளையாட்டுக்கள், கடைத்தொகுதிகள், விளையாட்டுப் பொருட்கள், துரித உணவுகள், குளிர்பானங்கள் என விசேட ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி நகரில் மாபெரும் சிறுவர் களியாட்ட நிகழ்வு
Reviewed by Editor
on
May 02, 2022
Rating:
